தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாடியில் இருந்து விழுந்து தென்காசி வாலிபர் சாவு

 மாடியில் இருந்து விழுந்து தென்காசி வாலிபர் சாவு

 மாடியில் இருந்து விழுந்து தென்காசி வாலிபர் சாவு


ADDED : ஏப் 09, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னையில் இருந்து சுற்றுலா வந்த வாலிபர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது வீட்டில் தென்காசி மாவட்டம் தேவன் குளம் பகுதியை சேர்ந்த கண்ணன், 19; என்பவர் வேலை பார்த்து வந்தார். துரை பாண்டி தனது உறவினர்கள் மற்றும் கண்ணன் ஆகியோருடன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.

லாஸ்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இரவு ஓவராக மது குடித்து, போதையில் இருந்த கண்ணன், சாப்பிட்ட குப்பையை ஜன்னல் வழியாக துாக்கி போடும் போது, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

பலத்த காயமடைந்த அவரை, புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us