/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டென்னிக்காய்ட் போட்டி: பரிசளிப்பு விழா
/
டென்னிக்காய்ட் போட்டி: பரிசளிப்பு விழா
ADDED : நவ 13, 2024 08:52 PM

வில்லியனுார் ; மாநில அளவிலான டென்னிக்காய்ட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்கத்தின் ஆதரவுடன், பாண்டிச்சேரி ஸ்போர்ட்ஸ் பெடரல் அகாடமி சார்பில், மாநில அளவிலான 26வது சீனியர் டென்னிக்காய்ட் போட்டி சுல்தான்பேட்டை காயதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் நடந்தது.
போட்டியில், பல்வேறு பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் கோவிந்தராஜன், இரட்டையர் பிரிவில் கோவிந்தராஜன், சிவக்குமார் ஜோடி முதலிடம் பிடித்தனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் கமலி, இரட்டையர் பிரிவில் நித்தியஸ்ரீ, காவியா முதலிடம் பிடித்தனர்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, புதுச்சேரி அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்கத் தலைவர் ராமு முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் ராஜவேலு, சங்க செயலாளர் தினேஷ்குமார், பாண்டிச்சேரி ஸ்போர்ட்ஸ் பெடரல் அகாடமி செயலாளர் ரகுமான் சேட்டு மற்றும் நிர்வாகிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

