தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டென்னிஸ் வாலிபால் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

 டென்னிஸ் வாலிபால் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

 டென்னிஸ் வாலிபால் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜன 22, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரி டென்னிஸ் வாலிபால் சங்கத்திற்கு, 2026 முதல் 2029 ஆண்டு காலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுச்சேரி டென்னிஸ் வாலிபால் சங்கத்திற்கு 2026 முதல் 2029 ஆண்டு வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான, தேர்தல் சேலியமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக வழக்கறிஞர் சிவகுமார் செயல்பட்டார். மேற்பார்வையாளராக அகில இந்திய டென்னிஸ் வாலிபால் சங்க பிரதிநிதி விஜய் ராஜ் செயல்பட்டார். புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று வாக்களித்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில், தலைவராக பலராமன், துணைத் தலைவர்களாக ஆசிரியர் அருளரசன், டாக்டர் சோழசிங்கராயர், செயலாளராக தண்டபாணி, இணைச் செயலாளர்களாக மனோகரன், முரளிதரன், சத்யா, அசோக்குமார், பொருளாளராக யோகலட்சுமி, செயற்குழு உறுப்பினர்களாக விமலா, பாரதிதாசன், ஸ்ரீகுமார் பாணு, பலிப்பு சந்தோஷ், சுவாதி மற்றும் புனிதஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, நடந்த புதிய நிர்வாகக் குழுவினருக்கு பாராட்டு விழாவில், பணி நிறைவு பெற்ற விரிவுரையாளர் சபாபதி தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் ஜான் அம்ரோஸ், சேலியமேடு மாதர் நல சங்க நிர்வாகி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கச் செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சிவக்குமார், ராஜேஷ், செல்வக்குமார், சச்சின், ராஜா மற்றும் புதுச்சேரி டென்னிஸ் வாலிபால் சங்க வீரர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us