/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருவிழாவில் இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு
/
திருவிழாவில் இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு
திருவிழாவில் இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு
திருவிழாவில் இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு
ADDED : ஜூன் 12, 2025 12:26 AM

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அருகே கோவில் திரு விழாவின்போது, இரு கிராம மக்கள் இடையே மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு நிலவியது.
நெட்டப்பாக்கம் அடுத்த நத்தமேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அப்பகுதி கிராம மக்கள் சுவாமியை அலங்கரித்து ஏரிப்பாக்கம் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பொங்கல் வைப்பதற்காக நேற்று மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டனர்.
தகவலறிந்த ஏரிப்பாக்கம் கிராம மக்கள் எங்கள் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு உற்சவர் சுவாமியை அழைத்து வரக்கூடாது. வேண்டுமானால், பொங்கல் வைத்து செல்லுமாறு கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஏரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இது எங்களுக்கு சொந்தமான கோவில். இங்கு நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உற்சவரை அழைத்து செல்லக்கூடாது என்பதற்கான உயர்நீதிமன்றம் உத்தரவு பெற்று இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் இரண்டு கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. போலீசார் இரு தரப்பினரையும் சமதனாப்படுத்தி, நத்தமேடு கிராம மக்கள் பொங்கல் வைக்க மட்டும் பாதுகாப்புடன் ஏரிப்பாக்கம் அய்யனாரப்பன் கோவிலுக்கு அழைத்து சென்று, திரும்ப அழைத்த வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.