/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டப்பகலில் மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
/
பட்டப்பகலில் மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
ADDED : அக் 14, 2025 06:25 AM
அரியாங்குப்பம் : நடந்து சென்ற, மூதாட்டியின் தாலி செயினை பறித்து சென்ற, மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தவளக்குப்பம் ஆனந்தா நகரை சேர்ந்தவர் இளங்கோ மனைவி எழிலரசி,60; இவர் நேற்று மதியம் அபிேஷகப்பாக்கம் சாலை வழியாக கடைக்கு நடந்து சென்றார். பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், திடீரென எழிலரசி கழுத்தில் இருந்த, நான்கரை சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
இச்சம்பவத்தில் மூதாட்டி கீழே விழுந்து காயமடைந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
எழிலரசி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதி உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து, தப்பி சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.