/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர வியாபாரிகள் முதல்வருக்கு நன்றி
/
சாலையோர வியாபாரிகள் முதல்வருக்கு நன்றி
ADDED : ஜன 13, 2024 07:01 AM

புதுச்சேரி : புதுச்சேரி அடையாள அட்டை பெறாத சாலையோர வியாபாரிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
புதுச்சேரி நகராட்சி மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டுபுகைபடத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட 7 தொகுதிகளில் சுமார் 3000 சாலையோர வியாபாரிகள் உள்ள நிலையில், 1060 நபர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதற்கிடையே, புதுச்சேரி நகராட்சியின் மூலம் கடந்த 10ம் தேதி சாலையோர வியாபாரிகளுக்கான தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், அனைத்து வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்கிய பிறகு, சரியான முறையில் தேர்தல் நடத்துமாறும், அதுவரை தற்காலிகமாக தேர்தலை ரத்து செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டார்.
இதற்காக, முதல்வர் ரங்கசாமிக்கு அடையாள அட்டை பெறாத சாலையோர வியாபாரிகள் சார்பாக நேற்று நன்றி தெரிவிக்கப்பட்டது.
அப்போது, சண்டே மார்க்கெட்டில் சில தனிநபர்கள் அரசுக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமிப்பு செய்து வாடகை விட்டு வருவது தொடர்பாக முதல்வர் ஆய்வு செய்து, அந்த இடத்தை புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட 80 சதவீத வியாபாரிகளுக்கு நகராட்சி மூலம் அளவீடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில், வியாபாரிகளுடன் உருளையன்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., தலைவர் வினோத் உடனிருந்தார்.