/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 34வது மலர் காய், கனி கண்காட்சி வரும் 9ம் தேதி துவக்கம்
/
புதுச்சேரியில் 34வது மலர் காய், கனி கண்காட்சி வரும் 9ம் தேதி துவக்கம்
புதுச்சேரியில் 34வது மலர் காய், கனி கண்காட்சி வரும் 9ம் தேதி துவக்கம்
புதுச்சேரியில் 34வது மலர் காய், கனி கண்காட்சி வரும் 9ம் தேதி துவக்கம்
ADDED : ஜன 30, 2024 06:18 AM
புதுச்சேரி : புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், 34வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி வரும் 9ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கூறியதாவது:
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 'வேளாண் விழா-2024' எனும் 34 வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கிறது.
இதில் வேளாண் தோட்டக்கலை, அதனைச் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள், விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு முறைகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை சிறப்பாக அரங்கங்களில் காட்சி அமைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற திட்டமிடப் பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மலர்கள், தொட்டி வளர்ப்பு, மலர் அலங்காரம், காய்கறிகள், பழ வகைகள், தென்னை, மூலிகை செடிகள், பழத்தோட்டங்கள், காய்கறி சாகுபடி , அலங்கார தோட்டம், மாடி தோட்டம், வீட்டு காய்கறி தோட்டம் மற்றும் ரங்கோலி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாண்டு, பள்ளி மாணவர்கள் மட்டும் பங்குபெறும் ரங்கோலி, வினாடி வினா மற்றும் கட்டுரை போட்டி நடக்கிறது.
இந்த கண்காட்சியில் பங்குபெறும் விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விவசாய கருத்தரங்குகள் மற்றும் உயர் ரக நடவு கன்றுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இவற் றுடன் தனியார் நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் செயல்பட உள்ளன.
எனவே, வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கும் 'வேளாண் விழா -2024' எனும் 34வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.