/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ம.க., பிரமுகரை வெட்டிய ஆசாமி கைது
/
பா.ம.க., பிரமுகரை வெட்டிய ஆசாமி கைது
ADDED : அக் 06, 2025 01:38 AM

காரைக்கால்: காரைக்காலில் பா.ம.க., பிரமுகரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், திருநள்ளார் அடுத்த நெய்வாச்சேரியை சேர்ந்தவர் சிவம், 49; பா.ம.க., பிரமுகர். இவரை கடந்த 16ம் தேதி பைக்கில் வந்த கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டியதில், படுகாயமடைந்தார்.புகாரின் பேரில் திருநள்ளார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். அதில், பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட நந்தா துாண்டுதலின்பேரில், திருநள்ளார் அம்பேத்கர் நகர் மாதேஷ், அப்துல் ரகுமான், பாலா உள்ளிட்ட கும்பல் சிவத்தை வெட்டியது தெரிய வந்தது.
அதன்பேரில், மாதேஷ், அப்துல் ரகுமான், பாலா, ரகு, சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த திருநள்ளார் கார்த்திக், 25; என்பவரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புறவழிச்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டபோது, பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற கார்த்திக்கை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தவறி விழுந்ததில், இடது காலில் முறிவு ஏற்பட்டது.
அவரை கைது செய்து, மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.