/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வளையல் வியாபாரி மயங்கி விழுந்து பலி
/
வளையல் வியாபாரி மயங்கி விழுந்து பலி
ADDED : பிப் 13, 2024 04:50 AM
புதுச்சேரி: கோவில் திருவிழாவில், வளையல் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42; இவரது மாமியார் கவுரி, 70; திருவிழாக்களில் வளையல் வியாபாரி. கதிர்காமம் கோவிலில் நடந்த செடல் திருவிழாவிற்காக கடந்த 7 ம் தேதி இருவரும், பக்கத்து ஊரைச் சேர்ந்த சிலருடன் புதுச்சேரி வந்தனர்.
கதிர்காமம் கோவிலில் வளையல் வியாபாரம் செய்துெகாண்டு இரவு அரசு மருத்துவ கல்லுாரி எதிரில் தங்கியிருந்தனர். வியாபாரம் முடிந்தவுடன், செந்தில்குமார் குடித்துவிட்டு வந்து துாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் காலை கெங்கையம்மன் கோவில் தெரு காலி மனையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற செந்தில்குமார் வெகுநேரமாகியும் வரவில்லை.
அங்கு சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில், வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் செந்தில்குமார் இறந்து கிடந்தார்.
கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.