ADDED : அக் 23, 2025 01:05 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், கந்த சஷ்டி விழாவை, மயிலம் பொம்மபுர ஆதீனம், காப்பு கட்டி துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம், செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகர் சன்னதியில் 11ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் காப்பு கட்டி விழாவை துவக்கி வைத்தார். உற்சவர் முருகருக்கு பூஜை செய்து, விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டினார்.
விழா குழு சார்பில், வழக்கறிஞர் ருத்ரகுமாரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கோவில் தனி அதிகாரி கமலஜோதி உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று (23ம் தேதி ) சம்ஹார வேல் அபிேஷகம், நாளை (24ம் தேதி) சூரபதுமன் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி, மாலை 6:00 மணிக்கு சிவ பூஜை, 26ம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சி, முக்கிய நிகழ்வாக 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 28ம் தேதி, காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.