/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆண்டாள் அருளிய திருப்பாவையில் கருந்துளை பேருண்மை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
ஆண்டாள் அருளிய திருப்பாவையில் கருந்துளை பேருண்மை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ஆண்டாள் அருளிய திருப்பாவையில் கருந்துளை பேருண்மை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ஆண்டாள் அருளிய திருப்பாவையில் கருந்துளை பேருண்மை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : டிச 20, 2025 06:27 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பாவை உபன்யாசத்தில் 4ம் நாளான நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம்:
திருப்பாவையின் நான்காம் பாசுரம், நாடு செழிக்க, நல் மழையை அருளுமாறு வேண்டி, மழை பொழிய வைக்கும் மந்திரார்த்தமான பாசுரம். பாசுரத்தில் உள்ள 'ஆழி' என்ற சொல்லை விசேஷமாக கருதலாம்.
ஆழி மழைக் கண்ணா என்பது பகவத் அனுபவம் வாயிலாக வாழ உலகினில் பெய்யும் நல் மழை போன்று ஞானத்தைப் பொழியும் ஆச்சார்யர்களைக் குறிப்பதாக பொருள் கொள்ளலாம். நம்மாழ்வாரும், ஆண்டாளும் எம்பெருமானின் ஸ்வரூபமாக விவரித்த இந்த பெரும் பாழ், மெய் கருத்தான ஊழி முதல்வன் என்பதைத் தான் நவீன விஞ்ஞானத்தில் கருந்துளை என்றும், அதுவே இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக உள்ள, பால்வெளி அண்டத்தின் அச்சு என்கின்றனர்.
இக்கருங்குழியின் அடர்த்தி மிக பெரிது. மெல்லிய ஒளிக்கீற்று கூட இதைத்தாண்டி போக முடியாத வண்ணம் கருங்குழியின் அடர்த்தி விழுங்கி விடுகிறதாம்.
இவ்வுண்மைகளை ஆராய்ந்த பேராசிரியர் சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
விஞ்ஞானம் சமீப காலங்களில் கண்டுணர்ந்து சொல்லிய இந்த பேருண்மையை ஆழ்வாரும், ஆண்டாளும் முன்பே மெய்ஞானத்தில் சொல்லிவிட்டார்கள்.
'ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து' என்றருளியுள்ளதில் முதலில் ஒளியைச் சொல்லி ஆழி போல் மின்னி, பிறகு ஒலியைச் சொல்லி வலம்புரி போல் நின்றதிர்ந்து ஒரு விஞ்ஞானக் கருத்தைப் பதிவு செய்துள்ளதைக் காணலாம்.
ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தை விட அதிகம் என்பதால் மின்னலைத் தொடர்ந்து தான் இடி முழக்க ஒலியைக் கேட்க முடியும் என்னும் நவீன விஞ்ஞானக் கருத்தை, ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து என்றருளி என்ற பதங்களால் ஆண்டாள் அன்றே சொல்லிவிட்டாள்' என்றார்.

