/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயன்படுத்தாத 7,000 ஏக்கர் நிலத்தை பழைய ஓனர்களிடமே ஒப்படைக்கிறது வாரியம்
/
பயன்படுத்தாத 7,000 ஏக்கர் நிலத்தை பழைய ஓனர்களிடமே ஒப்படைக்கிறது வாரியம்
பயன்படுத்தாத 7,000 ஏக்கர் நிலத்தை பழைய ஓனர்களிடமே ஒப்படைக்கிறது வாரியம்
பயன்படுத்தாத 7,000 ஏக்கர் நிலத்தை பழைய ஓனர்களிடமே ஒப்படைக்கிறது வாரியம்
ADDED : அக் 05, 2024 04:28 AM
சென்னை : வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்த உத்தேசித்த, 5,000 ஏக்கர் மற்றும், 'நோட்டீஸ்' அளித்த, 2,000 ஏக்கர் நிலத்தை, அதன் பழைய உரிமையாளர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளதாக, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மாவட்டங்களில் வீட்டு வசதி வாரிய திட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்டதில், 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதில், எவ்வித நோட்டீசும் கொடுக்காமல், கையகப்படுத்த உத்தேசித்த 5,000 ஏக்கர் நிலங்களில், உரிமையளர்கள் வீடு கட்டி வசித்து வருவதால், அந்த நிலங்களை வாரிய உத்தேச திட்டத்தில் இருந்து விடுவிக்கிறோம். இதற்கு, நிலத்தின் உரிமையாளர்கள் வாரிய தடையின்மை சான்று பெற தேவையில்லை.
கையகப்படுத்த நோட்டீஸ் அளித்த 2,000 ஏக்கர் நிலங்களில், மக்கள் வீடு கட்டி வசித்து வருவதால், அந்த நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்படுகிறது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 3,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்து, இழப்பீடு இறுதி செய்து, வைப்பு நிதியாக செலுத்திய தொகை மற்றும் பிற செலவு தொகைகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கிறோம். தொகை திரும்ப கிடைத்ததும், நிலங்கள் விடுவிக்கப்படும்.
இழப்பீடு கொடுத்து முழுமையாக கையகப்படுத்தினாலும், நிலம் தொடர்ந்து பழைய உரிமையாளரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
அங்கு ஏற்கனவே கட்டடங்கள் உள்ளதற்கான ஆதாரத்தை சமர்பித்த, இழப்பீட்டை திரும்ப செலுத்தினால். அந்த நிலங்களும் விடுவிக்கப்படும்.
புதிதாக குடியிருப்புகள் கட்ட நிலம் தேவைப்பட்டால், நில தொகுப்பு திட்டம் வாயிலாக, உரிமையாளர் பங்களிப்புடன் புதிய வழிமுறைகள் கையாளப்படும்.
இழப்பீடு கொடுத்து கையகப்படுத்துவதை விட்டு விட முடிவு செய்கிறோம்.
வாரியத்தின் திட்டங்களில் விற்காமல் உள்ள, 5,000 வீடுகளை, படிப்படியாக பொது பிரிவினருக்கு வாடகைக்கு விடுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.