/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மறைந்த மாஜி முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
/
மறைந்த மாஜி முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
ADDED : டிச 10, 2024 07:09 AM

நெட்டப்பாக்கம்; மறைந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், 93. உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான மடுகரை ரெட்டியார் வீதியில் நேற்று பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு, முதல்வர் ரங்கசாமி, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்குகள் முடிந்து, அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக மடுகரை இடுகாட்டிற்கு மாலை 5:50 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, அவரது குடும்ப சம்பிரதாயப்படி சடங்குகள் முடிந்த பின், போலீசாரின் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.