/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆரில் திடீர் பள்ளத்தால் விபத்து அபாயம் உள்வாங்கிய வாய்க்காலை சீரமைக்க வேண்டும்
/
இ.சி.ஆரில் திடீர் பள்ளத்தால் விபத்து அபாயம் உள்வாங்கிய வாய்க்காலை சீரமைக்க வேண்டும்
இ.சி.ஆரில் திடீர் பள்ளத்தால் விபத்து அபாயம் உள்வாங்கிய வாய்க்காலை சீரமைக்க வேண்டும்
இ.சி.ஆரில் திடீர் பள்ளத்தால் விபத்து அபாயம் உள்வாங்கிய வாய்க்காலை சீரமைக்க வேண்டும்
ADDED : ஜன 09, 2025 06:23 AM

புதுச்சேரி: இ.சி.ஆர்., அவசரகால செயல்பாட்டு மையம் அருகே லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பில், வாய்க்கால் உள்வாங்கி உள்ளதால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
லாஸ்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெருக்கெடுக்கும் மழை நீர், கொட்டுப்பாளையம் அவசரகால செயல்பாட்டு மையம் எதிரே சூழ்ந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், இ.சி.ஆரில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாகனங்கள் தத்தளித்து செல்கின்றன.
இ.சி.ஆரில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற, அவசரகால செயல்பாட்டு மையம் அருகே லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பில் வாய்க்கால் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது.
பணிகள் முடிந்த பிறகு பள்ளத்தின் மீது பேட்ஜ் ஒர்க்காக தார் சாலை போடப்பட்டது.
ஆனால், அந்த பேட்ஜ் ஒர்க் தார் சாலை, தொடர் வாகனப் போக்குவரத்தால் பெரிய அளவில் உள்வாங்கி நீண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளது. அருகில் வந்த பிறகு தான் பள்ளம் இருப்பது தெரிந்து, வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக சைடு வாங்கி செல்கின்றனர்.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரத்தில் பைக்கில் வருவோர், பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். கார், கனரக வாகனங்களில் வருவோரும் பள்ளத்தில் விழுந்து அதிர்ச்சியில் உறைந்து கடந்து செல்கின்றனர்.
கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள், பள்ளத்தில் விழும்போது, வாகனங்களில் பயணிப்போர் மட்டுமின்றி, அருகில் உள்ள கடைகளும் அதிர்கின்றன.
வாகன ஓட்டிகளின் கவனம் சிறிது சிதறினாலும் இப்பகுதியில், பெரிய விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
உள்வாங்கிய வாய்க்கால் பள்ளதால் பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன், போர்க்கால அடிப்படையில் இப்பகுதியில் சாலையை சீரமைக்க பொதுப்பணித் துறையின் நெடுஞ்சாலை பிரிவு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.