/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., - காங்., பஞ்சாயத்து முடித்த வைத்த முதல்வர்
/
பா.ஜ., - காங்., பஞ்சாயத்து முடித்த வைத்த முதல்வர்
ADDED : மார் 20, 2025 04:43 AM
புதுச்சேரி: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;
கல்யாணசுந்தரம்(பா.ஜ): குடிசை மாற்று வாரியத்தால் கடந்தாண்டு எத்தனை நபர்களுக்கு வீடு கட்டும் மானியம் வழங்கப்பட்டது. இந்தாண்டு எத்தனை பயனாளிகளுக்கு மானியம் வழங்க உத்தேசம் உள்ளது.
அமைச்சர் திருமுருகன்: குடிசைமாற்று வாரியத்தால் கடந்தாண்டு 1,546 பயனாளிகளிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. இந்தாண்டு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா 2.0 நகர திட்டத்தில் தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
கல்யாணசுந்தரம்: காலாப்பட்டு தொகுதியில் பயனாளிகள் பலர் வீடு கட்ட விண்ணப்பித்துள்ளனர். ஆனால் ஒன்று கூட கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் அதிகாரிகளிடம் பல முறை சொல்லியாகிவிட்டது. ஆனாலும் செய்யவில்லை. நீங்கள் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்று உள்ளீர்கள். காலாப்பட்டு தொகுதி ரொம்ப பாவம். அமைச்சர் மனது வைத்து அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும்.
வைத்தியநாதன்(காங்): அப்ப, நாங்களும் பாவம் தான். எங்கள் தொகுதியில் தரவில்லை. பணிகளும் நடக்கவில்லை.
முதல்வர் ரங்கசாமி: காலாப்பட்டு தொகுதியை பாவம் என்று சொல்ல கூடாது. காலாப்பட்டு தொகுதியில் பல கோடி திட்டங்கள் நடக்கிறது. ஒவ்வொன்றும் 30 கோடி, 40 கோடி என பெரிய திட்டங்கள். அனைத்து தொகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி தான் அரசின் எண்ணம். அதற்கேற்ப தான் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. எனவே புதுச்சேரியில் எந்த தொகுதியும் பாவம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
கல்யாணசுந்தரம்: காலாப்பட்டு தொகுதி 40 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதனை வளர்ச்சிக்கு இழுத்து வர வேண்டியுள்ளது. அதான் கேட்டேன். வேறு ஒன்றுமில்லை.