/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ டிரைவர்களை காய்ச்சி எடுத்த முதல்வர்
/
ஆட்டோ டிரைவர்களை காய்ச்சி எடுத்த முதல்வர்
ADDED : செப் 22, 2024 01:56 AM
புதுச்சேரியில் மீட்டர் இயக்கி ஆட்டோ கட்டணம் வசூலிப்பது கிடையாது. மனம்போன போக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வாடகை பைக் மூலம் புதுச்சேரியில் உலா வருகின்றனர். இதற்கு அடுத்த கட்டமாக வாடகை எலட்ரிக்கல் ஸ்கூட்டர் வந்துவிட்டது. வாடகை மட்டுமே, பெட்ரோல் தேவையில்லை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை விரும்புகின்றனர்.
வாடகை எலட்ரிக்கல் ஸ்கூட்டரால் தங்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக, ஆட்டோ டிரைவர்கள் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
அப்போது முதல்வர் ரங்கசாமி, உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. மருத்துவமனைக்கு, பள்ளி மாணவர் சவாரிகளை எலட்ரிக்கல் ஸ்கூட்டரில் ஏற்ற முடியாது. அரசு அனுமதியுடன் தான் இயக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் விரும்புவதை அவர்கள் தேர்வு செய்து கொள்ளட்டும். நீங்கள் பஸ் நிலையத்தில் இருந்து தட்டாஞ்சாவடிக்கு வர ரூ. 500 கேட்கிறீர்கள். அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல எவ்வளவு கேட்கிறீர்கள் என தெரியும். எல்லா ஆட்டோக்களும் பர்மீட் போட்டு ஓட்டுகிறீர்களா. புதுச்சேரியில் 6,000 ஆட்டோ ஓடுகிறது. 1,000 ஆட்டோக்களுக்கு பர்மீட் இல்லை, இன்சூரன்ஸ் இல்லை. நடவடிக்கை எடுத்தால் ஒரு ஆட்டோ கூட ஓட முடியாது.
பல ஆட்டோ ஓட்டுநர்கள் மதுபோதையில் ஓட்டுகின்றனர். முதல்வர் கார் செல்வது தெரிந்தும், முந்தி கொண்டு செல்கின்றனர்.
நீங்கள் செய்வது எல்லாம் எங்களுக்கு தெரியும். முதலில் மீட்டர் போட்டு சரியான கட்டணம் வசூலியுங்கள். பேட்டரி பைக்குகள் குறித்து விசாரிக்கிறேன் என கூறினார்.