/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாடகை சொகுசு காரில் கெத்துகாட்டும் ஆணையர்
/
வாடகை சொகுசு காரில் கெத்துகாட்டும் ஆணையர்
ADDED : நவ 10, 2024 04:20 AM
பாக்கம் பெயர் கொண்ட கொம்யூன் ஆணையராக இருந்தவர் கடந்தாண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய ஆணையர் நியமிக்கப்படாமல், மூலநாதர் குடி கொண்டிருக்கும் கொம்யூன் ஆணையர் சில மாதங்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அதன்பிறகு, திருக்காமேஸ்வரர் அருள்பாலித்து வரும் கொம்யூன் ஆணையர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவர் ரெகுலர் பதவி வகிக்கும் கொம்யூனில் இவருக்கு மகேந்திரா பொலிரோ மற்றும் டாடா சுமோ என இரு கார்கள் உள்ளன.
இவர் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கொம்யூன் ஆணையரின் வாகனம் பல மாதங்களுக்கு முன் பழுதடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளது. இதனால், இந்த கொம்யூனில் பொறுப்பு வகிக்கும் ஆணையர், தனது சொந்த கொம்யூன் வாகனத்தை பயன்படுத்தாமல், சொகுசு காரை மாதம் ரூ.50 ஆயிரம் வாடகைக்கு எடுத்து, வலம் வந்து மக்கள் வரிப்பணம் பல லட்சத்தை விரயமாக்கி வருகிறார்.