/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை; புதுச்சேரி அரசு அறிவிப்பு
/
தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை; புதுச்சேரி அரசு அறிவிப்பு
தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை; புதுச்சேரி அரசு அறிவிப்பு
தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை; புதுச்சேரி அரசு அறிவிப்பு
ADDED : அக் 29, 2024 06:30 AM
புதுச்சேரி: தீபாவளிக்கு முந்தைய நாளான 30 ம்தேதியும் புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றன. இதன் காரணமாக புதுச்சேரி பஸ்டாண்டில் கூட்டம் அலை மோதி வருகின்றது,
இந்நிலையில் தீபாவளிக்கு கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதி பொது விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி சார்பு செயலர் ஷிரன் வெளியிட்டுள்ள அரசாணையில்,
தீபாவளி பண்டிகையொட்டி தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் 30ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்கள், பொதுப்பணித் துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது.
அக்.30 ம்தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்சாகம்
இந்த அறிவிப்பின்படி புதுச்சேரியில் அக்.30 ம்தேதி விடுமுறை, அக்.31ம் தேதி தீபாவளி, நவ.1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் விழா, 2ம் தேதி சனிக்கிழமை, 3ம் தேதி ஞாயிறு என தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் அனைவருக்கும் விடுமுறை கிடைத்துள்ளது. ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்துள்ளதால், உற்சாகமாக தீபாவளியை கொண்டாட அனைவரும் ரெடியாகி வருகின்றனர்.