/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நற்செய்தி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை'
/
'நற்செய்தி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை'
ADDED : டிச 06, 2024 06:25 AM

புதுச்சேரி : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 8ம் ஆண்டு நினைவு நாள், புதுச்சேரி மாநில அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், அனுசரிக்கப்பட்டது.
மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமையில், எல்லை பிள்ளை சாவடியில் உள்ள ஜெயலலிதா சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின், அவர், கூறியதாவது:
ஜெயலலிதா நினைவு தினத்தில் நல்ல முடிவு வந்துள்ளது. சென்னை ஐகோர்ட், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கருத்து கேட்காமல், அவரது அனுமதி இல்லாமல் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கூடாது என்ற தீர்ப்பினை வழங்கி உள்ளது.
கட்சியையும் இரட்டை இலையையும் அழித்துவிட வேண்டும் என, நினைத்தவர்களுக்கு இது ஒரு சம்மட்டி அடி. இனி கட்சி எழுச்சி பெறும்.
முன்னாள் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி வலுப்பெற்று வரும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் நல்லாட்சி மலர்ந்திடும். தொண்டர்களுக்கு நற்செய்தி கிடைக்க பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை' என்றார்.
அவைத்தலைவர் மாசிலா குப்புசாமி, துணை தலைவர் முருகதாஸ், இணை செயலாளர் மகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.