/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
களைகட்டிய 'தினமலர்' மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம் ; புதுச்சேரியில் பல்வேறு மாவட்ட பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் உற்சாகம்
/
களைகட்டிய 'தினமலர்' மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம் ; புதுச்சேரியில் பல்வேறு மாவட்ட பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் உற்சாகம்
களைகட்டிய 'தினமலர்' மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம் ; புதுச்சேரியில் பல்வேறு மாவட்ட பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் உற்சாகம்
களைகட்டிய 'தினமலர்' மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம் ; புதுச்சேரியில் பல்வேறு மாவட்ட பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் உற்சாகம்
ADDED : நவ 24, 2024 06:53 AM
புதுச்சேரி : 'தினமலர்' மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம் புதுச்சேரியில் நேற்று விமர்சையாக நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் தங்களை புத்துணர்ச்சியுடனும் புதுப்பித்துக்கொண்டு உற்சாகத்துடன் விடைப்பெற்றனர்.
'தினமலர்' நாளிதழ், ஸ்பெக்ட்ரா அகாடமி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கை, புதுச்சேரி ஹோட்டல் கிரீன் பேலசில் நேற்று விமர்சையாக நடத்தியது.
'மன அழுத்த மேலாண்மை, ஆரோக்கிய வாழ்க்கை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் ஓர் குடையின் கீழ் நடந்த கருத்தரங்கை சிறப்பு விருந்தினர்கள், புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாசிரியர் கே.வெங்கட்ராமன், ஸ்பெக்ட்ரா அகாடமி இந்திய நிறுவன மேலாண் இயக்குநர் கார்த்திகேயன், கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார், கல்வியாளர் புகழேந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
ஸ்பெக்ட்ரா அகாடமி இந்திய நிறுவன கிளை மேலாளர் அரிஹரன், மருத்துவம், பொறியியல் நுழைவு தேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து விவரித்தார்.
கருத்தரங்க சிறப்பு அமர்வுகள் கல்வியாளர்களின் சிந்திக்க வைக்கும் பேச்சினால் ஒவ்வொரு நொடியும் களை கட்டியது.
ஆசிரியர்கள் அறிவு சார்ந்த சமுதாயத்தினர். அவர்களுக்கு வகுப்பெடுப்பது என்பது சிங்கத்தினை அதன் குகைகளில் சந்திப்பதை போன்றது. ஆனால் கல்வியாளர்கள், கருத்தரங்க அரங்கில், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை, உளவியல் பிரச்னைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு என அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வினை நொடியில் தந்தனர்.
புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மன அழுத்தம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி விளக்கம் பெற்றனர்.
மாணவர்களாக மாறிய ஆசிரியர்கள்
எப்போதும் ஆசிரியர்களாக பள்ளியில் இருக்கும் முதல்வர்கள், துணை முதல்வர்கள், இம்முறை மாணவர்களாக மாறி, அரங்கில் அமர்ந்திருக்க, ஒவ்வொரு கருத்தரங்க சிறப்பு அமர்வும் சரவெடியாகவும் ஜாலியாகவும் நகர்ந்தது.
கல்வியாளர்கள் சொற்பொழிவில் கரைந்த ஆசிரியர்கள் மாணவர்களின் பிரச்னைகளையும், மாணவர்களாகவே மாறி, அவர்களின் உணர துவங்கினர். நெஞ்சை தொட்ட வரிகளுக்கு கைதட்டல்களை பரிசாக கொடுத்தனர். ஆசிரியர்களை சிந்திக்கவும், அதே நேரத்தில் சிரிக்கவும் செய்த கருத்தரங்கம் சிரிப்பொலியால் அடிக்கடி அதிர்ந்தது.
சுடர் விளக்கு...
கருத்தரங்கில் பங்கேற்ற பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், 'மாணவர்களுக்கு கல்வி ஒளி தரும், சுடர் விளக்காக ஆசிரியர்கள் இருந்தாலும், அந்த ஆசிரியர்களுக்கும் துாண்டுகோல் தேவைப்படுகிறது.
அந்த பணியை 'தினமலர்' சிறப்பாக செய்து, எங்களின் மன அழுத்தத்தை அழகாக போக்கி உணர வைத்தது. கருத்தரங்கின் மூன்று மணி நேரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை என புகழாரம் சூட்டினர்.
மேலும், இப்பணியை 'தினமலர்' தொடர்ந்து செய்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும் உரிமையுடன் வைத்துவிட்டு, புது உற்சாகத்துடன், புத்துணர்ச்சியுடனும் தங்களை புதுப்பித்துக்கொண்டு விடைபெற்றனர்.