ADDED : மே 29, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மாற்றுத்திறனாளி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருபுவனைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 59; மாற்றுத்திறனாளி. இவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 22ம் தேதி இரவு 9:30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் பரசுராமன் கொடுத்த புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக் குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
