/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
/
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
ADDED : நவ 05, 2024 06:55 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பெருகியுள்ள சாலை ஆக்கிரமிப்புகள் வரும் 4ம் தேதி முதல் தொடர்ந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி உள்ள சாலை ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைத்துள்ள பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைத்துள்ள பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகளை வரும் 4ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஒவ்வொரு பகுதியாக அகற்ற முடிவு செய்யப்பட்டது. எனவே அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து அவற்றை அகற்ற அறிவுறுத்தப்படுகிறது.