sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க கோரிக்கை

/

இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க கோரிக்கை

இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க கோரிக்கை

இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க கோரிக்கை


ADDED : ஜன 04, 2024 03:05 AM

Google News

ADDED : ஜன 04, 2024 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடலில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமியிடம், நேரு எம்.எல்.ஏ., மனு அளித்தார்.

மனு விபரம்;

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளுக்கு,ஆக்கபூர்வ நடவடிக்கையைஅரசும், அதிகாரிகளும் செய்ய தவறியதால் பல அசம்பாவிதங்கள் அரங்கேறி வருகின்றன.கடலில் இறங்குபவர்களை தடுக்கவும், எச்சரிக்கவும், மீறி குளிப்பவர்கள் கடல் அலைகளால் இழுத்து செல்லப்பட்டால் உடனே காப்பாற்ற நீச்சல் தெரிந்த பணியாளர்களை நியமிக்கவேண்டும்.

அதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்காமல் விட்டதால் இளைஞர்கள், மாணவர்கள் பலர் பலியாகி உள்ளனர். நகரப்பகுதியில் சி.சி.டி.வி., கேமரா இல்லாததால் பல குற்ற சம்பவங்கள் எதனால் நடந்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் உள்ளன.

இந்த புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் பெருமளவில் கடற்கரை மற்றும் நகரப்பகுதியில் குவிந்தனர். மாணவர்கள் நான்கு பேர் கடலில் இறங்கி குளித்தபோது அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இனி இதுபோன்று நடக்காமல் இருக்க அரசும், அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us