ADDED : ஏப் 23, 2026 11:39 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: திருவண்டார் கோவில் மேம்பாலம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை, திருவண்டார் கோவில் மேம்பாலம் துவங்கும் இடத்தில், சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலை போடப்பட்டு ஒரு ஆண்டுகள் முடிவடையாத நிலையில், சாலை சேதமடைந்துள்ளது.
இந்த சாலையை தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயன்படுத்தி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். நகாய் அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
