
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பத்தில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் செலவில் கருமகாரிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுன், இளநிலை பொறியாளர் மனோகரன், திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடாஜலபதி, திருபுவனை வட்டார காங்., தலைவர் ஜெயக்குமார், பா.ஜ., மண்டல பொறுப்பாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

