தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பழமையான வீட்டின் முன்தளம்  விழுந்தது

பழமையான வீட்டின் முன்தளம்  விழுந்தது

பழமையான வீட்டின் முன்தளம்  விழுந்தது


ADDED : நவ 27, 2024 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. பகலில் துாரலுடன் லேசான மழை தொடர்ந்து பெய்து வந்தது. புதுச்சேரி ஒயிட் டவுன் மணக்குள விநாயகர் கோவில் அருகில் உள்ள லா தெ லொரிஸ்தோன் வீதியில், பிரான்சில் குடும்பத்துடன் வசிக்கும் பிரேம்குமார் சார்லி என்பவருக்கு சொந்தமான பழமையான வீடு உள்ளது.

இந்த வீடு கடந்த பல மாதங்களாக பூட்டப்பட்டு கிடக்கிறது. தொடர் மழையால் நனைந்து இருந்த வீட்டின் முன்பகுதி தளம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. சாலையில் நிறுத்தியிருந்த 3 பைக்குகள் சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், இடிந்து விழும் நிலையில் இருந்த மீதமுள்ள தளம் பகுதியை இடித்து அகற்றி, பாதுகாப்பை உறுதி செய்து புறப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us