ADDED : பிப் 26, 2024 11:44 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : கருவடிக்குப்பத்தில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கருவடிக்குப்பம், மேஜர் சரவணன் நகர், கம்பன் வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் ஜனனி, 20; தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றினார். இவர் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும்போது சாமிப்பிள்ளைதோட்டம் பகுதியைச் சேர்ந்த நபருடன் பழகி வந்தார். இதை அவரது தந்தை கண்டித்து வேலையை விட்டு நிறுத்திவிட்டார்.
வீட்டில் இருந்த ஜனனி கடந்த 23ம் தேதி மாலை திடீரென மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
