/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூலித் தொழிலாளி மகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தது அரசின் வெற்றி: முதல்வர் பெருமிதம்
/
கூலித் தொழிலாளி மகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தது அரசின் வெற்றி: முதல்வர் பெருமிதம்
கூலித் தொழிலாளி மகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தது அரசின் வெற்றி: முதல்வர் பெருமிதம்
கூலித் தொழிலாளி மகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தது அரசின் வெற்றி: முதல்வர் பெருமிதம்
ADDED : டிச 23, 2024 04:16 AM
புதுச்சேரி. : 'கூலி தொழிலாளியின் மகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தது அரசின் வெற்றி' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
ஸ்காலர் ஸ்பெக்ட்ரா சாதனை மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், அவர், பேசியதாவது;
மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லுாரியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் 7 உள்ளன. மருத்துவ கல்லுாரிகள் அதிகமாக இருப்பதால், அதிக மருத்துவர்களை உருவாக்க முடியும்.
திருக்கனுாரை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் அரசு மருத்துவ கல்லுாரியில் சேரும் அளவுக்கு அரசு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து, அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. அதன் மூலம் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவி மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளது தான் அரசுக்கு கிடைத்த வெற்றி.
ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்கு ஏற்ப அரசு, தனியார் மருத்துவ கல்லுாரியில் மருத்துவ படிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்தில், புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில், பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்ய பல பிரச்னைகள் இருந்தது. தற்போது, சிறிய துளை வழியாக அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்களை அறிந்து மக்களுக்கு பயன்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும். மருத்துவத்தில் சில பிரிவில் சிறந்த டாக்டர்கள் இல்லை. மாணவர்கள் அதுபோன்ற பிரிவுகளை தேர்வு செய்து நன்கு படிக்க வேண்டும்.
குறிப்பாக நரம்பு மண்டல சிகிச்சை பிரிவை எடுத்து மாணவர்கள் படித்து தனித்திறனுடன் வரவேண்டும். ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு சிறந்த மருத்துவர்களாக வரவேண்டும், என, பேசினார்.