ஊசுடேரி பாரத் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
ஊசுடேரி பாரத் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
ADDED : ஏப் 27, 2026 06:18 PM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் மழலைய மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டு(2025-26) மழலையர் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தி நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக அதிகாரி சங்கீதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல தலைமை மருத்துவ அதிகாரி மீனா பங்கேற்று மழலை மாணவர்களுக்கு பட்டங்களுடன், நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்தனர்.
