/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார நிலையம் இரவில் இயங்காத அவலம்
/
சுகாதார நிலையம் இரவில் இயங்காத அவலம்
ADDED : ஜூலை 29, 2025 07:35 AM
புதுச்சேரி : ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் முதலுதவி சிகிச்சைஅளிக்கததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ரெட்டியார்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவசரமாக சிகிச்சை பெற வருபவர்களுக்கு இரவு 10:00 மணிக்கு மேல் முதலுதவி சிகிச்சை அளிக்காமல் இருப்பதாகவும், ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தாலும், பல்வேறு காரணங்களை கூறி வராமல் இருப்பதாக, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
சுகாதார நிலையத்தின் வாயில் கேட்டுகள், இரவு 10 மணிக்கு பிறகு மூடியும், மின் விளக்குகளை அனைத்து விடுகின்றனர். அதனால், அவசரத்திற்கு வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தொடரும் இந்த பிரச்னைக்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.