தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொடர்ந்து 'சதம்' அடிக்கும் வெயில்

தொடர்ந்து 'சதம்' அடிக்கும் வெயில்

தொடர்ந்து 'சதம்' அடிக்கும் வெயில்


ADDED : ஜூலை 14, 2025 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : கோடைக்காலம் முடிந்தும், தொடர்ந்து வெயில் அதிகரித்து வருகிறது. நேற்று 101.1 டிகிரி வெயில் பதிவானதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அக்னி நட்சத்திரம் துவக்கத்திலேயே விட்டு, விட்டு மழை பெய்தது. கடந்த மாதம் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், கோடைக்காலம் முடிந்தும் வெயில் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. கடந்த 11ம் தேதி 100.22 டிகிரி, 12ம் தேதி 100.4 டிகிரி வெயில் பதிவானது.

நேற்று வெயின் தாக்கம் மேலும் அதிகரித்து 101.1 டிகிரியாக பதிவானது. இந்த மாதத்திலேயே 6 முறை வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக, நேற்று அதிகபட்ச வெயில் பதிவானதால், பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us