ADDED : அக் 26, 2026 09:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்த கனமழை நகரப் பகுதி மக்களுக்கு சவாலாகவும், கிராமப்புற விவசாயிகளுக்கு நம்பிக்கையாகவும் மாறி உள்ளது.
வங்க கடலில் உருவாகிய புயல் சின்னம் காரணமாக, நேற்று (அக்.,25) புதுச்சேரி முழுதும் தொடர் கனமழை பெய்தது. இதனால், நகரப்பகுதியின் முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஆனால், நகரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட காட்சியாகக் கிராமப் புறங்களில் மழைக்குப் பின் எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்திய வயல்வெளிகளுடன் கிராமங்கள் எழிலாகக் காட்சியளிக்கின்றன. மழை நீரால் குளிர்ந்துள்ள நிலங்களில் நாற்று நடுதல், களை பறித்தல் போன்ற விவசாயப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
ஒரே மழைதான், ஆனால் அதன் விளைவுகள் மட்டும் நகரத்திலும், கிராமத்திலும் முற்றிலும் வேறாக அமைந்துள்ளன.
