/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., குழு நிர்வாகிகளுடன் பொறுப்பாளர் ஆலோசனை
/
காங்., குழு நிர்வாகிகளுடன் பொறுப்பாளர் ஆலோசனை
ADDED : செப் 11, 2025 03:04 AM
புதுச்சேரி: காங்., கட்சியில் புதிதாக அமைத்துள்ள குழு தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி காங்., கட்சியில் புதிதாக 5 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் 'ஓட்டு திருட்டு பேரணி' குழு, முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள் தலைமையில் ஓட்டுச் சாவடி ஏஜென்டுகள் நியமன குழு, ஷாஜகான் தலைமையில் ஓட்டுச்சாவடி தீவிர உறுப்பினர் சேர்க்கை பட்டியல் குழு, கந்தசாமி தலைமையில் வட்டார கமிட்டி தீவிர உறுப்பினர் சேர்க்கை குழு, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் தலைமையில் 'ஓட்டு திருட்டு கையெழுத்து எதிர்ப்பு இயக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் புதுச்சேரி காங்., பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொறுப்பாளருடன், குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், 'வார் ரூம்' பொறுப்பாளர் துகினா, வைத்தியநாதன் எம் எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சமூக வலைதள குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தொடர்ந்து அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் கிழக்கு மாவட்ட காங்., கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.