/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏழாவது முறையாக ெஷட்டரை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை ஒரே ஸ்டைலில் தொடரும் சம்பவம்
/
ஏழாவது முறையாக ெஷட்டரை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை ஒரே ஸ்டைலில் தொடரும் சம்பவம்
ஏழாவது முறையாக ெஷட்டரை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை ஒரே ஸ்டைலில் தொடரும் சம்பவம்
ஏழாவது முறையாக ெஷட்டரை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை ஒரே ஸ்டைலில் தொடரும் சம்பவம்
ADDED : பிப் 13, 2024 04:57 AM
புதுச்சேரி: வில்லியனுார் மற்றும் அரியூரில் கடையை உடைத்து ரூ. 1.2 லட்சம் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனுார் கண்ணகி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பாலமுருகன் பேக்கிரி கடையை கடந்த 2ம் தேதி நள்ளிரவு ெஷட்டரை உடைத்து ரூ. 2 லட்சம் திருடிக் சென்றார்.
மூப்பனார் காம்பளக்ஸில் சேகர் நடத்தி வரும் காபி ஷாப்பை உடைத்து ரூ.95 ஆயிரம் திருட்டு , அருகில் உள்ள சுரேஷ் மொடிக்கல் ஷாப் உடைத்து ரூ. 25 ஆயிரம் என அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்தது.
கடந்த 8ம் தேதி, மூலக்குளம் முத்து காஸ் ஏஜென்சி ஷட்டரை உடைத்து ரூ. 9 லட்சமும், ரெட்டியார்பாளையம் ரத்னா ஸ்டோர் ஷட்டரை நெம்பி ரூ.84 ஆயிரம் திருடிச் சென்றான். ஒரே நபர் 5 கடைகளின் ஷட்டர் உடைத்து திருடிச் சென்ற பிறகும் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவில்லை.
இந்நிலையில் வில்லியனுார் கண்ணகி பள்ளி அருகில் உள்ள பாலமுருகன் பேக்கிரியை நேற்று 2வது முறையாக ஷட்டரை உடைத்த அதே நபர் திருட முயற்சித்தார்.
ஆனால், பேக்கரியில் பணம் ஏதும் வைக்காததால், ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இதையடுத்து அரியூர் மெயின்ரோட்டில் உள்ள பெஸ்ட் பார்மஸி ஷட்டரை நெம்பி உள்ளே சென்ற மர்ம ஆசாமி, அங்கிருந்த ரூ. 1.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றார்.
வில்லியனுார் மற்றும் ரெட்டியார்பாளையம் பகுதியில் மட்டும் கடந்த 10 நாட்களில், 7 கடைகளை உடைத்து ரூ.14.5 லட்சம் பணத்தை, ஒரே நபர் திருடிச் சென்றுள்ளார். ஏற்கனவே நடந்த தொடர் திருட்டு சம்பவத்திற்கு பிறகாவது, இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி இருந்தால், நேற்று மீண்டும் திருட்டு அரங்கேறி இருக்காது. தொடர்ந்து நடந்து வரும் திருட்டு சம்பவம், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே பாணியில் திருட்டு
வில்லியனுார், அரியூர், மூலக்குளம், ரெட்டியார்பாளையம் பகுதியில் நடந்த திருட்டுகள் அனைத்தும் அதிகாலை 2:00 மணி முதல் காலை 3:00 மணிக்குள் நடந்துள்ளது. அதுபோல், 7 கடைகளிலும் இரும்பு ஷட்டர்கள் இரும்பு கம்பியால் நெம்பி உள்ளே சென்று திருட்டில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.