/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணி அபார வெற்றி
/
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணி அபார வெற்றி
ADDED : செப் 22, 2024 01:44 AM

புதுச்சேரி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
நேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணி 49.4 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியின் முஹம்மத் அமான் 4 விக்கெட்டும், கார்த்திகேயா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 ஓவர்களில் 3 விக்கெட் இழந்தது. அதன் பிறகு, முஹம்மத் அமான் மற்றும் கார்த்திகேயா ஜோடி அபாரமாக ஆடி 36 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர்.
கேப்டன் முஹம்மத் அமான் 58 ரன்களும், கார்த்திகேயா 85 ரன்களும் எடுத்தனர். 2 விக்கெட் மற்றும் 85 ரன்கள் எடுத்த கார்த்திகேயாவிற்கு, ஆட்டநாயகன் விருதை கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் கவுரவ செயலாளர் ராமதாஸ் வழங்கினார்.
தொடரின் இரண்டாவது போட்டி நாளை (23ம் தேதி) நடக்கிறது.