/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிற்பிக்கு கத்தி குத்து தொழிலாளிக்கு வலை
/
சிற்பிக்கு கத்தி குத்து தொழிலாளிக்கு வலை
ADDED : செப் 25, 2024 04:04 AM
புதுச்சேரி : புதுச்சேரி ஆலங்குப்பம், சஞ்சீவி நகரை சேர்ந்தவர் அய்யனார், 42; இவர் சிற்ப வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் கோழி கடையில் வேலை செய்யும் சுரேந்தருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் இருவரும் தனித்தனியாக மது குடித்தனர். அய்யனார் தனது பைக்கில் வீட்டுக்கு செல்லும் போது, வழிமறித்த சுரேந்தர் தான் வைத்திருந்த கத்தியால், அவரை குத்தி விட்டு தப்பி சென்றார். அதில், பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள சுரேந்தரை தேடிவருகின்றனர்.