ADDED : அக் 16, 2024 09:59 PM
அரியாங்குப்பம் : முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 75. இவர், மீன் பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வீராம்பட்டினம் கடற்கரை கொட்டகையில் படுத்திருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மதன்;46, என்பவர், சுந்தரமூர்த்தியிடம் ஏன் இங்கு வந்து படுத்தாய் என கேட்டார். அதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த, மதன், சுந்தரமூர்த்தியை பலமாக தாக்கியதில், அவரது பல் உடைந்தது. கத்தியை காட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மதனை கைது செய்தனர். அவரிடமிருந்து, கத்தியை பறிமுதல்செய்தனர். இவர் மீது, அடிதடி, மிரட்டுதல் வழக்குகள் உள்ளன.