/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மண்ணாடிப்பட்டு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்
/
மண்ணாடிப்பட்டு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்
மண்ணாடிப்பட்டு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்
மண்ணாடிப்பட்டு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்
ADDED : பிப் 06, 2025 06:59 AM
திருக்கனுார்; மண்ணாடிப்பட்டு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை (7 ம் தேதி) ஆரோவில், பல்மைரா கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது.
ஐ.பி.எல்-டி20 பாணியில், கிராமப்புற இளைஞர்களின் திறமையை மேம்படுத்த, மண்ணாடிப்பட்டு தொகுதியை சார்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கான மண்ணாடிப்பட்டு பீரிமியர் லீக் டி20 (எம்.பி.எல்-டி20) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது.
ஆரோவில், பல்மைரா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (7 ம் தேதி) துவங்கும் சீசன் 1, போட்டியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
இப்போட்டியில், கெத்து காங்கேயன்ஸ், ஜல்லிக்கட்டு காளையன்ஸ், மின்னல் வீரர்கள், சங்கராபரணி கொம்பன்ஸ், தமிழ் தீரன்ஸ், வேல்ஸ் வீரர்கள், வெற்றி தளபதிஸ், வெற்றி வீரன்ஸ் ஆகிய 8 அணிகளின் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிகள் இணைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நாளை (7ம் தேதி) துவங்கும் முதல் போட்டியில் சங்கராபரணி கொம்பன்ஸ்- வெற்றி வீரன்ஸ் அணிகளும், 2வது போட்டியில் கெத்து காங்கேயன்ஸ்- தமிழ் தீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மொத்தம் 32 போட்டிகள் கொண்ட இந்த லீக் தொடரின் இறுதி போட்டி வரும் மார்ச் 23ம் தேதி நடக்கிறது. இதில், முதல் பரிசாக ரூ. 75 ஆயிரம், 2ம் பரிசாக ரூ. 50 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 40 ஆயிரம், 4ம் பரிசாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை எம்.பி.எல் டி 20 கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.