/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனமே மனிதனின் நண்பனாகவும் எதிரியாகவும் உள்ளது; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
மனமே மனிதனின் நண்பனாகவும் எதிரியாகவும் உள்ளது; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
மனமே மனிதனின் நண்பனாகவும் எதிரியாகவும் உள்ளது; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
மனமே மனிதனின் நண்பனாகவும் எதிரியாகவும் உள்ளது; ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஏப் 07, 2025 06:17 AM

புதுச்சேரி; மன விகாரம் ஏற்படாத வரையில் தவறுக்கோ அதர்மத்திற்கோ இடமில்லை என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று நான்காம் நாளாக அவர் செய்த உபன்யாசம்;
ராவணனின் அந்தப்புரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மண்டோதரியைப் பார்த்து முதலில் அவள் தான் சீதா பிராட்டி என்று நினைத்துக் கொண்டு ஹனுமான் குதித்தார்.பிறகு மாற்றானின் அந்தப்புரத்தில் சீதா பிராட்டி, இருக்க முடியாது என, தெரிந்து பல இடங்களில் தேட ஆரம்பித்தார்.
அயலார் அந்தப்புரத்தில் அலங்கோலமாகத் துாங்கிய பெண்களைப் பார்க்குபடி ஆனதே என வருந்தினார். இது அனுமனின் சுய கட்டுப்பாட்டிற்கும் பிரம்மச்சார்யத்திற்கும் சோதனை.
மன விகாரம் ஏற்படாத வரையில் தவறுக்கோ அதர்மத்திற்கோ இடமில்லை. மனம் விகாரமடைந்தால், காமமும், குரோதமும் ஏற்படும்.
ராமனை உள்ளத்தில் கொண்டவர்களின் மனம் மற்றொன்றில் இருக்குமா.எண்ணப்படியே பார்வை அமைகிறது.
புலன் நுகர் விஷயத்தை நினைக்க, நினைக்க அவ்விஷயத்தில் பற்றுதல் ஏற்படும். பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகும். ஆசையிலிருந்து காமம் ஏற்படும். ஆசை நிறைவேறாதபோது கோபமும் குரோதமும் உண்டாகும்.
கோபத்தால் மயக்கம் உண்டாகும். மயக்கத்தால் நினைவு தவறுகிறது. அதாவது பகுத்தறியும் அறிவு இல்லாமல் போகிறது. நினைவு தவறுதலால், பகுத்தறியும் அறிவு மங்குவதால், புத்தி நாசம் அடைகிறது. இதனால் அழிவு ஏற்படுகிறது. மனமே மனிதனின் நண்பன். மனமே மனிதனின் எதிரி.
எங்கு தேடியும் தேவியைக் காணவில்லையே ராவணனால் கவர்ந்து வரப்பட்ட தேவி வழியிலேயே மாண்டிருப்பாளோ. தனிமையில் சிறைபடுத்தப்பட்ட சோகத்தால் உயிர் இழ்ந்திருப்பாளோ, ராவணன் கொன்றிருப்பானே என அனுமான் பலவாறு கலங்கி நிற்கின்றான்.
எடுத்துக் கொண்ட காரியத்தைத் தான் விடா முயற்சியுடன் தொடர வேண்டும். இப்பொழுது நான் மனம் தளர்ந்து போய், உற்சாகத்தை இழந்து விடக் கூடாது.
உற்சாகம் தான் எல்லா காரியங்களிலும் மக்களை ஈடுபடுத்தக்கூடியது. நான் மனம் தளராமல் சீதா பிராட்டியைத் தேடிக் கண்டுபிடிப்பேன் என்று உறுதியுடன் அனுமார் தேட ஆரம்பித்தார்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

