/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாயமான சிறுமிகள் வீடு திரும்பினர்
/
மாயமான சிறுமிகள் வீடு திரும்பினர்
ADDED : ஏப் 05, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி, வீட்டின் அருகே தனது தோழியுடன், விளைாடிய போது, இருவரும் மாயமாகினர். அவர்களின் பெற் றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, பெற்றோர்கள், சோலை நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அன்று இரவு இரு சிறுமிகளும் வீடு திரும்பினர். அவர்களுடன் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.
விசாரணையில், தோழியுடன், சிறுமி கடற்கரைக்கு சென்றது தெரிய வந்தது. பெற்றோரிடம் சொல்லாமல் வெளியில் செல்ல கூடாது என போலீசார் அறிவுரை கூறி, சிறுமிகளை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

