/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கொடுத்த கார் அடிக்கடி 'மக்கர்' சட்டசபைக்கு பைக்கில் வந்த எம்.எல்.ஏ.,

ADDED : பிப் 23, 2024 03:32 AM

புதுச்சேரி: சுயேட்சை எம்.எல்.ஏ.,அங்காளன் பைக்கில் வந்து சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சட்டசபை இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கு எம்.எல்.ஏ.,க்கள் காரில் வந்து இறங்க, திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் மட்டும் தனது பைக்கில் வந்து கலந்து கொண்டார்.
அவரது கார் என்னாச்சு என்று அவரிடம் கேட்டபோது, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் புது கார் கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் எனக்கு மட்டும் பல ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிய பழைய கார் கொடுக்கப்பட்டது.
அதனை நம்பி எங்கும் எடுத்து செல்ல முடியவில்லை. வெளியூரும் போக முடியவில்லை.திடீரென நடுவழியில் மக்கராகி நின்றுவிடுகின்றது. அப்புறம் பொதுமக்கள் உதவியுடன் தள்ளி ஸ்டார்ட் செய்து ஒருவழியாக வீடு திரும்ப வேண்டியுள்ளது.
இந்த காரில் எங்கு சென்றாலும் உங்களுக்கு ஒரு கார் கூடவா கவர்மெண்ட்டில் தர மாட்டாங்க என்று கிண்டல் அடிக்கின்றனர்.
அந்த காரில் ஏ.சி.,யும் வேலை செய்யவில்லை.கார் ஜன்னலை திறந்தாலே கொசு புகுந்து படாய்படுத்துகின்றது.இப்படி கொசு கடித்ததால் எனக்கு டெங்கு வந்து உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அதனால் தான் அரசு கொடுத்த காரை நம்புவதை காட்டிலும் என்னுடைய பைக்கில் செல்லிப்பட்டில் இருந்து சட்டசபைக்கு வந்துவிட்டேன் என்றார்.