/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய மதுபான ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை
/
புதிய மதுபான ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை
புதிய மதுபான ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை
புதிய மதுபான ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை
ADDED : மார் 18, 2025 04:20 AM
முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதிய மதுபான தொழிற்சாலைகள் தேவையில்லை. ஏற்கனவே உள்ள மதுபான ஆலையில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என்ற வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: மக்கள் பாதிக்கும் எந்த செயலையும் அரசு செய்யாது. ஏற்கனவே 5 மதுபான ஆலை உள்ளது. இன்னும் சில தொழிற்சாலைகள் வரலாம்.
இதனால் வேலை வாய்ப்பு கிடைக்கும், அரசுக்கு வருமானம் வரும். ஒரு நாளைக்கு ஒரு தொழிற்சாலை 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்கும்.இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவை அனைத்தும் தெரிந்து தான் அனுமதி கொடுக்கிறோம். ஒரு யூனிட்டில் 500 பெண்கள் வேலை செய்வார்கள். வடிசாராய ஆலை என்பது வேறு. அங்கு அதிகமான தண்ணீர் உறிஞ்சுப்படும்.
நேரு எம்.எல்.ஏ.; சொந்த மதுபானம் தயாரித்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். வெளிமாநிலத்தில் பிரபலான மது பிராண்டுகளை தயார் செய்து கொடுப்பதால் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சும் தன்மை உள்ளது. இதனை கண்காணிக்க வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: அப்படியெனில் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதை ரத்து செய்துவிடலாமா.
கல்யாணசுந்தரம்: ஆண்டிற்கு 2 லட்சம் கேஸ் மதுபானம் மட்டுமே விற்பனையாகிறது.
ஏற்கனவே உள்ள 5 ஆலைகளில் இருந்து 10 லட்சம் கேஸ் மதுபானம் உற்பத்தி செய்கின்றனர். இவை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிற்கு விற்பனைக்கு செய்யவில்லை. கூடுதல் மதுபானம் கள்ள சந்தையில் விற்பனை செய்வர். புதிய மதுபான ஆலையால் அரசுக்கு வருமானம் வராது.
முதல்வர் ரங்கசாமி; வருவாய் எப்படி உயர்த்த வேண்டும் என துறைகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும்.
முறைகேடு செய்தவர்கள் அபராதம் செலுத்தவிட்டு தான் வருகிறார்கள். நமக்கு வருவாய் வேண்டும். அனைத்தும் தெளிவாக தெரிந்து தான் அனுமதி கொடுத்துள்ளோம்.
கல்யாணசுந்தரம்; முதல்வருக்கு என்று நல்ல பெயர் உள்ளது. மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்தால் கெட்ட பெயர் ஏற்படும்.
முதல்வர் ரங்கசாமி; புது தொழிற்சாலையால் யார், யாருக்கு என்னென்ன பாதிப்பு என்று தெளிவாக கூறுகிறேன். இது தொழில் போட்டியில் வருகிற பாதிப்பு என்பது எனக்கு நன்றாக தெரியும்.
கல்யாணசுந்தரம்; நீங்கள் மது இல்லாத புதுச்சேரியாக மாற்றினாலும், அதனை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.
ஆறுமுகம்; மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு வரி வருவாய் எப்படி வரும். அரசு ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் போட முடியும்.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார்; காங்., ஆட்சியில் மாஜி முதல்வர் நாராயணசாமி தனது உறவினர்கள் 2 பேர் மதுபான ஆலை துவங்க அனுமதி வழங்கினார். அப்போது யார் கேட்டார்கள்.கல்யாணசுந்தரம்; தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால் நாங்கள் எங்களுடைய கருத்துக்களை கூறுகிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.