ADDED : அக் 22, 2024 05:49 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மடுகரை சாராயக்கடை அருகே கால்நடை மருத்துவமனை பின்புறம் உள்ள குட்டையில் அழுகிய நிலையில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மடுகரை சாராயக்கடைக்கு மது குடிக்க வரும் சிலர் அங்கு குடித்துவிட்டு, அருகில் உள்ள பகுதியில் இயற்கை உபாதைகள் கழிக்க செல்லும் போது குட்டையில் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இதுவரை இந்த குட்டையில் மூவர் இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
