ADDED : ஜூன் 17, 2025 07:56 AM

காரைக்கால் : காரைக்கால் விழிதியூர் பகுதியில் மின் கசிவு ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டியின் உதவித் தொகை பணம் ரூ.80 ஆயிரம் பணம் கருகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் விழிதியூர் தெற்கு தெருவை சேர்ந்த இளவழகன் இவரது வீட்டில் கடந்த 14ம் தேதி மின்கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டில் உள்ள மின்சார பொருட்கள், முக்கிய ஆவணங்கள், நகை மற்றும் ரொக்கம் உள்ளிட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
மேலும் அவரது வீட்டின் பக்கத்தில் வசிக்கும் சீனிவாசன் மனைவி தனலட்சமி, 75; வீடும் தீப்பிடித்து எரிந்தது. உடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்து பொருட்களுடன் தனலட்சுமி வீட்டு பிரோவில் வைத்திருந்த மூன்று சவரன் நகை மற்றும் 500 ரூபாய் நோட்டு கள் கொண்ட ரூ.80ஆயிரம் ரூபாய் எரிந்தது.
தனலட்சுமி பெற்றுவரும் அரசு உதவித்தொகை மற்றும் 100நாள் வேலைக்கு சென்று சேமித்துவைத்திருந்த பணம் எரிந்து சேதமானதை பார்த்து மூதாட்டி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சமூக வளைதலங்களில் பரவி வைரலாகி வருகிறது.
