/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
/
பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
ADDED : டிச 03, 2024 06:24 AM

புதுச்சேரி: புதுச்சேரியை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவித்து நிவாரணப் பணியை முடுக்கிவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
கனமழையால், வீடூர், சாத்தனுார் அணைகள் திறக்கப்பட்டு, ஏரிகள் அனைத்தும் நிரம்பி குடியிருப்புகள், விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பகுதி வாரியாக அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற செய்திருந்தால், பாதிப்புகளை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். மருத்துவ குழுக்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.10 ஆயிரம், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம், விவசாய நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்று ரூ. 20 ஆயிரம், கால்நடைகளுக்கு இலவச தீவனம், உயிரிழிந்த மாடுகளுக்கு ரூ. 50 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
பழுதுபட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் பழுது பார்க்கும் செலவை அரசு ஏற்பதாக அறிவிப்பு செய்ய வேண்டும்.
இதனை அரசு பேரிடர் பாதிப்பாக அறிவிப்பு செய்து, ஆய்வு செய்வதற்கு மத்திய குழுவை புதுச்சேரிக்கு வரவழைத்து, உரிய இழப்பீட்டை பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.