/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு கேட்டு கலக்கும் அரசியல் வாரிசு; ராஜ்பவன் தொகுதி மக்கள் குஷி
/
ஓட்டு கேட்டு கலக்கும் அரசியல் வாரிசு; ராஜ்பவன் தொகுதி மக்கள் குஷி
ஓட்டு கேட்டு கலக்கும் அரசியல் வாரிசு; ராஜ்பவன் தொகுதி மக்கள் குஷி
ஓட்டு கேட்டு கலக்கும் அரசியல் வாரிசு; ராஜ்பவன் தொகுதி மக்கள் குஷி
ADDED : ஏப் 12, 2025 10:14 PM

புதுச்சேரியில் மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்னேஷ். இவர் தனது தந்தை போல் காங்., கட்சியில் சேர்ந்து ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட டில்லியில் உள்ள தலைவர்களை சந்தித்து பேசினார். அதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள காங்.தலைவர்கள் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக.,விற்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டது. அதனால் தற்போது இந்த தொகுதி காங்., கட்சிக்கு கிடைக்குமா என தெரியாத நிலை உள்ளதால், விக்னேஷுக்கு உறுதிமொழி கொடுத்து கட்சியில் சேர்க்க முடியாது என டில்லி தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.
இனி காங்..,கை நம்பி பயனில்லை என கருதிய விக்னேஷ் தனது தந்தையின் ஆதரவாளர்களுடன் நேரடியாக ராஜ்பவன் தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் நிற்பதற்கு பணிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவக்கினார்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் தொகுதியில் வீடு, வீடாக சென்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கூறி, வரும் சட்டசபை தேர்தலில் நான் நிற்கிறேன், எனது தந்தையை ஆதரித்து போல் என்னை ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சர்க்கரை, சேமியா நெய், முந்திரி உள்ள தொகுப்பு பையை வழங்கி வருகிறார்.
மேலும் ராஜ்பவன் தொகுதியில் வரும் வரும் சட்டசபை தேர்தலில் உறுதியாக நிற்கிறேன் உங்கள் ஓட்டுகளை தாருங்கள் என்று தொகுதி முழுவதும் பேனர் வைத்துள்ளார். ராஜ்பவனில் முதல் வேட்பாளராக பணிகளை விக்னேஷ் துவக்கி உள்ளது பிற அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

