/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா வியாபாரிக்கு சிறையிலும் கஞ்சா தலையை பிய்த்து கொள்ளும் போலீசார்

ADDED : அக் 20, 2024 04:42 AM
வில்லியனுாரை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி, சில மாதங்களுக்கு முன் கஞ்சா வாங்க சென்றபோது, ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் ஜாமினில் வந்தவர், வாரத்தில் மூன்று நாள் ஆந்திரா போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.
இடைப்பட்ட நாளில்,அங்கிருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு புதுச்சேரிக்கு வந்தவரை, வில்லியனுார் போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிந்து, கடந்த 9ம் தேதி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட கஞ்சா வியாபாரி மற்றும் அவரது கூட்டாளியும் சிறையில் கஞ்சா அடித்தபோது சிறை வார்டனிடம் கையும் கலவுமாக சிக்கினர்.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு போலீசார் கண்காணிப்பில் இருந்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, அங்கிருந்து நேராக காலாப்பட்டு சிறையில் அடைத்தவரிடம், கஞ்சா வந்தது எப்படி எனத் தெரியாமல், போலீசார் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர்.