/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்கனுார் பகுதி கடைகளில் போலீசார் திடீர் சோதனை
/
திருக்கனுார் பகுதி கடைகளில் போலீசார் திடீர் சோதனை
ADDED : அக் 26, 2024 06:21 AM

திருக்கனுார்: திருக்கனுாரில் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, கிராமப்புறங்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், போதை பொருள் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா தலையிலான குழுவினர் கூனிச்சம்பட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு, மண்ணாடிப்பட்டு, திருக்கனுார் உள்ளிட்ட கிராமங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிகளில் நேற்று முன்தினம் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், பள்ளிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.