/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போஸ்டரால் சீட்டு பறிபோன 'மாஜி'
/
போஸ்டரால் சீட்டு பறிபோன 'மாஜி'
ADDED : மார் 21, 2026 04:25 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் முன்னாள் மாஜி ஒருவருக்கு ஒட்டப் பட்ட போஸ்டரால் தேர்தலில் நிற்க சீட்டு கிடைக்கா மல் போன சோகம் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தேசியக் கட்சியுடன் கூட்டணி உள்ள அந்த மாநில கட்சியின் மாஜி அமைச்சர் ஒருவர் மீது, கடந்த ஆண்டு சிக்கல் பிடித்த வழக்கு ஒன்று பதிவானது. வழக்கில் சிக்கிய அந்த மாஜி அமைச்சரை கண்டித்து எதிர் தரப்பில் உள்ளவர்கள் கடந்த சில மாதங்களாக போஸ்டர் ஒட்டி வந்தனர்.
கட்சித் தலைமை போஸ்டர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில், இதெல்லாம் எனக்கு சாதாரணம் என அலட்சியமாக இருந்த அந்த 'மாஜி'க்கு தற்போதைய தேர்தலில் சீட்டு இல்லை என கூறி, அம்போ என கட்சி தலைமை கைவிட்டு விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாஜியின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

