ADDED : மார் 03, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையோர கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில், கடந்த மாதம் தட்டுப்பாடு காரணமாக பூண்டு விலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வடமாநிலங்களில் இருந்து பூண்டு வருவதால், விலை குறைய துவங்கி விட்டது.
புதுச்சேரி சாலையோரங்களில் டாடா ஏஸ் மினி வாகனங்களில் பூண்டு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காலாப்பட்டு, வழுதாவூர் சாலைகளில் மினி வாகனங்களில் பூண்டு குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

